பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பது பஜ்ரங் புனியாவின் தனிப்பட்ட முடிவு: விளையாட்டுத் துறை அமைச்சகம்

பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பது பஜ்ரங் புனியாவின் தனிப்பட்ட முடிவு என விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பது பஜ்ரங் புனியாவின் தனிப்பட்ட முடிவு: விளையாட்டுத் துறை அமைச்சகம்

பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பது பஜ்ரங் புனியாவின் தனிப்பட்ட முடிவு என விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்திய மல்யுத்த சம்மேளத்தின் புதிய தலைவராக பிரிஜ் பூஷண் சிங்கின் நெருங்கிய ஆதரவாளரான சஞ்சய் சிங் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தனது பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பதாக முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில், பத்மஸ்ரீ விருதை திருப்பியளிப்பது பஜ்ரங் புனியாவின் தனிப்பட்ட முடிவு என விளையாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விளையாட்டுத் துறை அமைச்சகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிப்பது மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவின் தனிப்பட்ட முடிவு.  உலக மல்யுத்த சம்மேளனத் தலைவருக்கானத் தேர்தல் நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடந்துள்ளது. பத்மஸ்ரீ விருதினை திருப்பியளிக்கும் பஜ்ரங் புனியாவின் முடிவை கைவிடுமாறு அவரிடம் நாங்கள் வலியுறுத்துவோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com