ஒருநாள், டி20 தொடர் தோல்விக்குப் பிறகு மனம் திறந்த ஜோஸ் பட்லர்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள், டி20 தொடர் தோல்விக்குப் பிறகு மனம் திறந்த ஜோஸ் பட்லர்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடியது. இந்த இரண்டு  தொடர்களிலும் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்றது. ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 3-2 என்ற கணக்கிலும் மேற்கிந்தியத் தீவுகள் கைப்பற்றியது. 

இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை இழந்தபோதிலும் சில நேர்மறையான விஷயங்கள் இங்கிலாந்துக்கு கிடைத்துள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அவர்களுக்கே உரித்தான சிக்ஸர் அடிக்கும் திறமையை வெளிப்படுத்தி அதிக சிக்ஸர்களை அடித்தார்கள். அதனைத் தடுப்பதற்கும் சில யுக்திகளை நாங்கள் கையாண்டோம். அவர்களின் சிக்ஸர் அடிக்கும் திறன் டி20 தொடர் முழுமைக்கும் தொடர்ந்தது. மேற்கிந்தியத் தீவுகள் 64 சிக்ஸர்களை அடித்தனர். இங்கிலாந்து 56 சிக்ஸர்களை விளாசியது.

தோல்வியை ஏற்றுக் கொள்வது கடினம். இருப்பினும், எங்களுக்கு சில நேர்மறையான விஷயங்களும் இந்த தொடர்களின் மூலம் கிடைத்துள்ளது. இந்தியாவில் நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடர் எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமளித்தது. இருப்பினும், ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் கொளுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com