டெஸ்ட்டில் இவர் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார்: சுனில் கவாஸ்கர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட்டில் இவர் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுகிறார்: சுனில் கவாஸ்கர்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் 2 ரன்கள் மற்றும் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் பெரிய ஸ்கோர் குவிக்கத் தவறினார். 

இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஷுப்மன் கில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடுவதாக நினைக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதைக் காட்டிலும் டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு சிறிது வித்தியாசம் உள்ளது. அந்த வித்தியாசம் பந்தில்தான் உள்ளது. சிவப்பு பந்து வெள்ளைப் பந்தைக் காட்டிலும் காற்றில் வேகமாக நகரும். அதேபோல ஆடுகளத்திலும் சிவப்பு பந்து வேகமாக நகரும். வெள்ளைப் பந்தைக் காட்டிலும் சிவப்பு பந்தில் பௌன்சர்கள் அதிகம் இருக்கும். இவையனைத்தையும் ஷுப்மன் கில் மனதில் வைத்து விளையாட வேண்டும் என்றார்.

டெஸ்ட் போட்டிகளில் கடந்த 9  இன்னிங்ஸ்களில்  21 ,5, 13, 18, 6, 10, 29 (நாட் அவுட்) , 2, 26 ரன்கள் முறையே ஷுப்மன் கில் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com