ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்த்தார்கள்: ஜடேஜா பாராட்டு!

ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை பார்த்தார்கள்: ஜடேஜா பாராட்டு!

காயத்திலிருந்து மீண்டு வர நேஷனல் கிரிக்கெட் அகாதெமி ஊழியர்கள் தனக்கு மிகவும் உதவியதாக ஆல்ரவுண்டர் ஜடேஜா கூறியுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் 2-வது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளும் எடுத்த ஜடேஜா பேட்டிங்கில் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் எடுத்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் பரிசளிப்பு விழாவில் ஜடேஜா கூறியதாவது:

ஐந்து மாதங்கள் கழித்து ரன்களும் விக்கெட்டுகளும் எடுத்து நூறு சதவீதம் பங்களித்திருப்பது சந்தோஷமாக உள்ளது. நேஷனல் கிரிக்கெட் அகாதெமியில் கடுமையாக உழைத்தேன். என்சிஏ ஊழியர்கள், பயிற்சியாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடன் கடுமையாக உழைத்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளிலும் பணிபுரிந்தார்கள். ஸ்டம்புக்கு நேராகப் பந்துவீசுவதில் ஆர்வமாக இருந்தேன். அவர்கள் தவறிழைத்தால் எனக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பேட்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com