பிசிசிஐ, ஐபிஎல்-லில் பதவிகள் வேண்டாம்: கே.எல். ராகுல் ஆதரவு ட்வீட்டில் பதறிய முன்னாள் வீரர்!

கே.எல். ராகுலுக்கு இந்திய அணி ஆதரவு தருவதற்கான காரணத்தை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கியுள்ளார்.
பிசிசிஐ, ஐபிஎல்-லில் பதவிகள் வேண்டாம்: கே.எல். ராகுல் ஆதரவு ட்வீட்டில் பதறிய முன்னாள் வீரர்!

கே.எல். ராகுலுக்கு இந்திய அணி ஆதரவு தருவதற்கான காரணத்தை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா விளக்கியுள்ளார்.

ஒரு வருடத்துக்கு முன்பு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரு சதமும் அரை சதமும் எடுத்தார் கே.எல். ராகுல். அத்தொடரில் இந்திய அணி சார்பில் அதிக ரன்கள் எடுத்தவர் அவர்தான். (1-2 எனத் தொடரில் தோற்றது இந்தியா.) அடுத்து விளையாடிய சமீபத்திய வங்கதேச டெஸ்ட் தொடரில் ராகுல் சரியாக விளையாடவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் மோசமாகவே விளையாடியுள்ளார். கடைசி 10 இன்னிங்ஸில் ஒருமுறையும் 25 ரன்களைக் கூட அவர் தாண்டவிலை. இதனால் கே.எல். ராகுலை இந்திய அணியிலிருந்து நீக்கவேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளார். இந்திய முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத், ட்விட்டரில் ராகுலைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் வெளிநாடுகளில் கே.எல். ராகுல் நன்கு விளையாடியதால் தான் தற்போது இந்திய அணியில் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதாக இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

சேனா (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ரன்கள் எடுத்த இந்திய பேட்டர்களின் பட்டியல் இது. ஒருவேளை இதனால் தான் கே.எல். ராகுலுக்கு இந்திய அணி ஆதரவு தருவதாக இருக்கலாம். இந்தக் காலக்கட்டத்தில் சொந்த மண்ணில் தற்போது 2 டெஸ்டுகள் விளையாடியுள்ளார் என்றார். மேலும் இந்த ட்வீட் குறித்து தன் மீது விமர்சனம் வரலாம் என்பதால் அடுத்து அவர் கூறியதாவது:

இல்லை... இல்லை... எனக்கு பிசிசிஐயில் தேர்வுக்குழு உறுப்பினர், பயிற்சியாளர் பதவி வேண்டாம். மேலும் ஐபிஎல் போட்டியில் ஆலோசகர், பயிற்சியாளர் பதவிகளும் வேண்டாம் என்று கூறியுள்ளார்.

பிசிசிஐ, ஐபிஎல்-லில் பதவிகளை எதிர்பார்த்துத்தான் பல முன்னாள் வீரர்கள் கே.எல். ராகுலை விமர்சிக்காமல் உள்ளார்கள் என்று வெங்கடேஷ் பிரசாத் கூறியிருந்தார். இதன் காரணமாகவும் இப்படியொரு விளக்கத்தை ஆகாஷ் சோப்ரா அளித்திருக்கலாம் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com