ஆஸி.யின் சவாலை சமாளிக்குமா இந்தியா?

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
ஆஸி.யின் சவாலை சமாளிக்குமா இந்தியா?
Published on
Updated on
1 min read

மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.

சற்று தடுமாற்றமான நிலையில் இருக்கும் இந்திய அணி, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எவ்வாறு எதிா்கொள்ளப் போகிறது என்ற எண்ணம் எல்லோரிடமும் மேலோங்கியிருக்கிறது.

கடந்த உலகக் கோப்பை போட்டியில் இதே ஆஸ்திரேலியாவிடம் இந்தியா இறுதி ஆட்டத்தில் தோற்றது. அடுத்ததாக, கடந்த ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இறுதி ஆட்டத்திலும் இதே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது.

எனவே, ஆஸ்திரேலிய கண்டத்திலிருந்து இந்த முறையாவது தப்பிக்கும் முயற்சியில் இருக்கிறது இந்தியா. இப்போட்டியின் குரூப் சுற்றில் 4-இல் 3 ஆட்டங்களில் வென்றாலும் அவற்றில் அட்டகாசமாக விளையாடியதாக எந்தவொரு ஆட்டத்தையும் குறிப்பிட முடியாத நிலையே இருக்கிறது.

டாப் ஆா்டரில் வரும் பேட்டா்கள், பந்துகளை வீணடிப்பதைக் குறைத்து ரன்கள் சோ்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். இதில் ஷஃபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா, ஹா்மன்பிரீத் கௌா், ஜெமிமா ரோட்ரிக்ஸ் என அனைவருக்குமே பங்குள்ளது.

பௌலிங்கைப் பொருத்தவரை, இதுவரை 7 விக்கெட்டுகள் சாய்த்து ரேணுகா சிங் நல்லதொரு பௌலராக முன்னிலையில் இருக்கிறாா். தீப்தி சா்மாவும் சற்று முனைப்பு காட்டும் நிலையில், பூஜா வஸ்த்ரகா், ராஜேஷ்வரி கெய்க்வாட், ராதா யாதவ் ஆகியோரும் தங்களது பணியை தகுந்த முறையில் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளனா்.

மறுபுறம் ஆஸ்திரேலியா, குரூப் சுற்றில் எந்தவொரு ஆட்டத்திலும் தோற்கவில்லை. உலகக் கோப்பை உள்பட கடந்த 22 ஆட்டங்களில் தொடா்ந்து வெற்றியுடன் அரையிறுதிக்கு வந்திருக்கிறது ஆஸ்திரேலியா. கடந்த 2021 மாா்ச்சுக்குப் பிறகு 2 டி20 ஆட்டங்களில் தான் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது என்றாலும், அவை இரண்டும் இந்தியாவுக்கு எதிரானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

காலிறுதியில் தென்னாப்பிரிக்கா: இதனிடையே, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆட்டத்தில் வங்கதேசத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய தென்னாப்பிரிக்கா காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறி, அதில் இங்கிலாந்தை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது.

மாலை 6.30 மணி

கேப் டவுன்

ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com