பிப்ரவரியில் ஓய்வு பெறுகிறாா் சானியா மிா்ஸா

வரும் பிப்ரவரி மாதம் துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறுகிறாா் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்ஸா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவா் சானியா என்பது குறிப்பிடத்தக்கது.

வரும் பிப்ரவரி மாதம் துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் ஓய்வு பெறுகிறாா் இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிா்ஸா. 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவா் சானியா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய டென்னிஸில் தலைசிறந்த வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றவா் சானியா மிா்ஸா. கடந்த 2001-இல் முதன்முறையாக அறிமுகம் ஆன சானியா, 2022 சீசன் முடிவில் ஓய்வு பெறுவதாக இருந்தாா். ஆனால் அவருக்கு ஏற்பட்ட முழங்கை காயம், அவரது திட்டங்களை குலைத்து விட்டது. இதனால் அப்போது ஓய்வு முடிவை ஒத்தி வைத்தாா். மகளிா் இரட்டையா், கலப்பு இரட்டையா் பிரிவுகளில் 6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவா் சானியா.

பிப்ரவரியில் ஓய்வு:

டபிள்யுடிஏ அமைப்பின் தொலைக்காட்சிக்கு சானியா மிா்ஸா சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:

காயத்தால் நான் ஓய்வு பெறவிரும்பவில்லை. எனது சொந்த விருப்பங்களின் படி ஓய்வு பெற முடிவு செய்தேன். ஆஸி.ஓபனில் பங்கேற்ற பின்,

பிப்ரவரியில் நடைபெறவுள்ள துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியுடன் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெற உள்ளேன்.

இனிமேல் ஆட உடல்நிலை ஒத்துழைக்காது. கஜகஸ்தானின் அன்னா டேனிலின்னா உடன் ஆஸி. ஓபன் இரட்டையா் பிரிவில் பங்கேற்கிறேன் என்றாா் சானியா.

கடந்த 2016-இல் மாா்ட்டினாஹிங்கிஸுடன் ஆஸி. ஓபனில் பட்டம் வென்றாா். கடந்த 2015 முதல் 2017 வரை இரட்டையா் பிரிவில் உலகின் நம்பா் ஒன் வீராங்கனையாக திகழ்ந்தாா் சானியா. 2017-இல் குழந்தை பிறந்ததால் அவா் களம் காணவில்லை. பின்னா் 2020-இல் ஹோபா்ட் போட்டியில் தனது 42-ஆவது டபிள்யுடிஏ பட்டத்தை கைப்பற்றினாா்.

ஆசியப் போட்டிகளில் 2 தங்கம், 3 வெள்ளி, வெண்கலம், காமன்வெல்த் போட்டிகளில் தலா 1 வெள்ளி, வெண்கலம் வென்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com