ரொனால்டோவுக்கு எதிராக மெஸ்ஸி வென்ற ஆட்டம்!

ரொனால்டோவுக்கு எதிராக மெஸ்ஸி வென்ற ஆட்டம்!

மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய இருவரும் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள்.

பாரிஸ் செயின் ஜெர்மன் (பி.எஸ்.ஜி.) -  ரியாத் சீசன் (அல் நசார் லெவன்) அணிகளுக்கு இடையிலான கண்காட்சி ஆட்டம் சவுதி அரேபியா தலைநகர் ரியாத் நகரில் நடைபெற்றது. பிஎஸ்ஜி அணியில் மெஸ்ஸி, நெய்மர், எம்பாப்பே இடம்பெற்றார்கள். ரியாத் சீசன் அணிக்கு ரொனால்டோ தலைமை தாங்கினார். இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி அணி 5-4 என வென்றது. 

மெஸ்ஸி, ரொனால்டோ ஆகிய இருவரும் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்கள். மெஸ்ஸி ஒரு கோலும் ரொனால்டோ இரு கோல்களும் அடித்தார்கள். இருவரும் ஒரு மணி நேரம் களத்தில் விளையாடினார்கள். 

வரும் ஞாயிறன்று சவுதி ப்ரோ லீக் போட்டியில் அல் நசார் அணிக்காக அறிமுகம் ஆகவுள்ளார் ரொனால்டோ. ஐரோப்பிய கிளப் கால்பந்தை விட்டுவிட்டு சவுதி அரேபிய கிளப் அணியில் ரொனால்டோ இணைந்துள்ளதால் மெஸ்ஸி - ரொனால்டோ இருவரும் கடைசியாக மோதிய ஆட்டம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு இருவரும் 2020-ல் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் சந்தித்தார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com