ரோஜர் ஃபெடரரை தமிழில் தலைவா என்ற விம்பிள்டன் நிர்வாகம்!

ரோஜர் ஃபெடரரை தமிழில் தலைவா என்ற விம்பிள்டன் நிர்வாகம்!

டென்னிஸ் விளையாட்டின் முடிசூடா மன்னனான ரோஜர் ஃபெடரரை விம்பிள்டன் நிர்வாகம் தலைவா எனக் குறிப்பிட்டு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
Published on

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர் தொடர்ந்து 302 வாரங்கள் உலகின் நம்.1 டென்னிஸ் வீரராக இருந்தவர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும் 8 முறை விம்பிள்டன் கோப்பையையும் வென்றிருக்கிறார். 

மேலும், உலகின் பல முன்னணி போட்டிகளிலும் கலந்துகொண்டு வெற்றிகளைக் குவித்து பெரும் கவனத்தைப் பெற்றவர். 

சர்வதேச டென்னிஸ் விளையாட்டின் ஜாம்பவானான ரோஜர் ஃபெடரர் சமீபத்தில் அனைத்து வகையான டென்னிஸ் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். 

இந்நிலையில், நேற்று ‘விம்பிள்டன்’ போட்டி நடைபெற்ற இடத்திற்கு குடும்பத்துடன் ரோஜர் ஃபெடரர் வந்திருந்தார்.

இதைப் பாராட்டும் விதமாக பல்வேறு பதிவுகளைப் பதிவிட்ட விம்பிள்டன் நிர்வாகம் தன் முகநூல் பக்கத்தில், ‘தலைவா’ என தமிழ் வார்த்தையைக் குறிப்பிட்டு ரோஜரின் புகைப்படத்தை இணைத்துள்ளனர். 

இதனைக் கண்ட தமிழ் ரசிகர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com