

இந்திய கூடைப்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக, தமிழகத்தின் ஆதவ் அர்ஜுனா புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
தில்லியில் நடைபெற்ற சம்மேளன தேர்தலில் மொத்தம் பதிவாகிய 41 வாக்குகளில், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கத்தின் தலைவர் ஆதவ் அர்ஜுனா 38 வாக்குகளுடன் வெற்றி பெற்றார்.
பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஆதவ் அர்ஜுனா, "இந்திய கூடைப்பந்து சம்மேளன தலைவரான முதல் தமிழர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சம்மேளன தேர்தலை நடத்தாமல் ஒரு சிலர் மட்டுமே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தற்போது நீதிமன்றம் மூலம் தேர்தலை நடத்தி வெற்றி பெற்றுள்ளோம்.
இந்திய கூடைப்பந்து அணியை உலக அளவில் முதல் 10 இடங்களுக்குள் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். "கூடைப்பாந்தாட்ட லீக்' போட்டிகள் நடத்தப்பட்டு இந்திய அளவில் வீரர்களின் தரம் உயர்த்தப்படும். அதில் வெளிநாட்டு வீரர்களை விளையாட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.