தொடக்க ஆட்டக்காரர்கள் சதம் விளாசல்: வங்கதேசத்துக்கு 332 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்!

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் குர்பாஸ் மற்றும் இப்ரஹீமின் சதங்களால் ஆப்கானிஸ்தான் 9  விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் குவித்துள்ளது.
படம் | ட்விட்டர்
படம் | ட்விட்டர்

வங்கதேசத்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் குர்பாஸ் மற்றும் இப்ரஹீமின் சதங்களால் ஆப்கானிஸ்தான் 9  விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் குவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3  போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி இன்று (ஜூலை 8) நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் தொடக்க வீரர்கள் ரஹமனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ரஹீம் ஆகியோரின் அதிரடி சதத்தால் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 331 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய குர்பாஸ் 125 பந்துகளில் 145 ரன்கள் எடுத்தார். அதில் 13 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இப்ரஹீம் 119 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஆப்கானிஸ்தானின் மற்ற வீரர்களில் முகமது நபி தவிர வேறு யாரும் அதிக அளவில் ரன் சேர்க்கவில்லை.

முஸ்தபிசூர் ரஹ்மான், ஹாசன் முகமது, ஷகீப் அல் ஹசன் மற்றும் மெஹிதி ஹாசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து, 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேச அணி களமிறங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com