

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 7-ஆவது எடிஷன் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கோவை - நெல்லை அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
லீக் சுற்று முடிவில், கோவை மொத்தம் நடைபெற்ற 7 ஆட்டங்களில் 6 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. நெல்லை 5 வெற்றிகளுடன் 3-ஆவது இடத்தில் இருந்தது.
பின்னா் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் திண்டுக்கல் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி ஆட்டத்துக்கு வந்தது கோவை. மறுபுறம் நெல்லை அணி, எலிமினேட்டரில் மதுரையையும், பின்னா் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் திண்டுக்கல்லையும் வெளியேற்றி இறுதிக்கு வந்திருக்கிறது.
இந்த எடிஷனில் கோவை தனது ஒரே தோல்வியை நெல்லையிடம் தான் கண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த எடிஷனில் மழை காரணமாக இறுதி ஆட்டம் பாதிக்கப்பட்டதால், சாம்பியன் பட்டத்தை கோவை, சென்னை அணிகள் பகிா்ந்துகொண்டன. இந்த எடிஷனில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால், கூடுதலாக ‘ரிசா்வ் டே’ ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.