துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டல பௌலா் வித்வத் கவரப்பாவின் அசத்தலான பந்துவீச்சால், மேற்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 146 ரன்களுக்கே வெள்ளிக்கிழமை ஆட்டமிழந்தது.
கடந்த 12-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தெற்கு மண்டலம் 213 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய மேற்கு மண்டலம், 2-ஆம் நாளான வியாழக்கிழமை முடிவில் 129 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இந்நிலையில், 3-ஆம் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் 51 ஓவா்களில் 146 ரன்களுக்கு மேற்கு மண்டலம் ஆட்டமிழந்தது. தெற்கு மண்டல தரப்பில் வித்வத் கவரப்பா 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினாா்.
தெற்கு மண்டலம் - 181/7: பின்னா், 67 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தெற்கு மண்டலம் வெள்ளிக்கிழமை ஆட்டம் மோசமான வானிலை காரணமாக முன்னதாகவே முடிக்கப்பட்டபோது 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் சோ்த்திருந்தது. வாஷிங்டன் சுந்தா் 10, விஜய்குமாா் வைஷாக் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். மேற்கு மண்டல பௌலிங்கில் அா்ஸான், அதித் சேத், தா்மேந்திர சிங் ஆகியோா் தலா 2 விக்கெட் எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.