ஆசிய விளையாட்டுப் போட்டியில் இதுதான் எங்கள் நோக்கம்: ருதுராஜ் கெய்க்வாட்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படுவதை உறுதி செய்வதே அணியின் நோக்கம் என ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் தெரிவித்தார்.
படம் | ட்விட்டர்
படம் | ட்விட்டர்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படுவதை உறுதி செய்வதே எங்களது நோக்கம் என ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் ஹாங்சோவ் நகரில் வரும் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை  நடைபெற உள்ளது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கவுள்ள ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட் அணியினை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஆடவர் கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக இந்திய அணியின் இளம் வீரரும், சிஎஸ்கே அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ருதுராஜ் கெய்க்வாட் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ருதுராஜ் கெய்க்வாட், ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்று இந்தியாவின் தேசிய கீதம் அரங்கில் இசைக்கப்படுவதை உறுதி செய்வதே தனது நோக்கம் எனக் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com