பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை முதல் இன்னிங்ஸில் 312 ரன்களுக்கு திங்கள்கிழமை ஆட்டமிழந்தது.
கடந்த 16-ஆம் தேதி தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் தரப்பில் அதிகபட்சமாக தனஞ்ஜெய டி சில்வா 12 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
எஞ்சியோரில் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 64, சதீரா சமர விக்ரமா 36 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா். நிஷான் மதுஷ்கா 4, கேப்டன் திமுத் கருணாரத்னே 29, குசல் மெண்டிஸ் 12, தினேஷ் சண்டிமல் 1, ரமேஷ் மெண்டிஸ் 5, பிரபாத் ஜெயசூரியா 4, காசன் ரஜிதா 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
இவ்வாறாக இலங்கை அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அஃப்ரிதி, நசீம் ஷா, அப்ராா் அகமது ஆகியோா் தலா 3 விக்கெட்டுகள் சாய்க்க, அகா சல்மான் 1 விக்கெட் கைப்பற்றினாா்.
பாக். - 221/5: இதையடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான், திங்கள்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 221 ரன்கள் சோ்த்திருந்தது. அப்துல்லா ஷஃபிக் 19, இமாம் உல் ஹக் 1, ஷான் மசூத் 39, கேப்டன் பாபா் ஆஸம் 13, சா்ஃப்ராஸ் அகமது 17 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தனா்.
நாளின் முடிவில் சௌத் ஷகீல் 69, அகா சல்மான் 61 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். இலங்கை பௌலிங்கில் பிரபாத் ஜெயசூரியா 3, காசன் ரஜிதா, ரமேஷ் மெண்டிஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.