சதமடித்த  மகிழ்ச்சியில் விராட் கோலி
சதமடித்த மகிழ்ச்சியில் விராட் கோலி

500-வது போட்டியில் சதமடித்து அசத்திய விராட் கோலி!

தனது 500-வது சர்வதேசப் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார் விராட் கோலி.

தனது 500-வது சர்வதேசப் போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார் விராட் கோலி.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று (ஜூலை 20) தொடங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இந்தப் போட்டி இந்திய அணியின் வீரர் விராட் கோலி விளையாடும் 500-வது சர்வதேசப் போட்டியாகும். 

விராட் கோலியின் 500-வது சர்வதேசப் போட்டி என்பதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி சதமடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 206 பந்துகளில் 121  ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 11  பவுண்டரிகள் அடங்கும். டெஸ்ட் போட்டிகளில் இது விராட் கோலியின் 29-வது சதமாகும்.

சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருடைய 76-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

X
Dinamani
www.dinamani.com