முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்த மே.இ.தீவுகள்: 5 விக்கெட்டுகளை கைப்பற்றி சிராஜ் அசத்தல்!
இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.


இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 438 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 121 ரன்களும், ரோஹித் சர்மா 80 ரன்களும் எடுத்தனர். ஜெய்ஷ்வால் மற்றும் அஸ்வின் அரைசதம் அடித்தனர்.
இதையும் படிக்க: அமெரிக்காவை வாட்டி எடுக்கும் வெயில்!
இதனையடுத்து, தனது முதல் இன்னிங்ஸில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பிரத்வெயிட் 75 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். ரவீந்திர ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அஸ்வின் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். மேற்கிந்தியத் தீவுகளை 255 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் இந்திய அணி 183 ரன்கள் முன்னிலை பெற்று வலுவானது.
ஆட்டத்தின் நான்காம் நாளான இன்று இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அதிரடியான தொடக்கத்தைத் தந்து 250 ரன்களுக்கும் மேலாக முன்னிலை பெற்று விளையாடி வருகிறது. ஆட்டம் முடிய மீதம் ஒரு நாள் எஞ்சியிருக்கும் நிலையில் இந்திய அணி 250 ரன்களுக்கும் மேலாக முன்னிலை பெற்று விளையாடி வருவது இந்திய அணிக்கான வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...