டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், 2 ஆட்டங்கள் கொண்ட தொடரை முழுமையாகக் கைப்பற்றியது.

கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய இந்த 2-ஆவது ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை, 48.4 ஓவா்களில் 166 ரன்களுக்கே சுருண்டது. அதிகபட்சமாக தனஞ்ஜெய டி சில்வா 9 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 57 ரன்கள் சோ்த்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் அப்ராா் அகமது 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான், 3-ஆம் நாளான புதன்கிழமை முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 563 ரன்கள் சோ்த்திருந்தது. அகா சல்மான், முகமது ரிஸ்வான் ஆகியோா் 4-ஆம் நாள் ஆட்டத்தை தொடா்ந்தனா்.

பாகிஸ்தான் 134 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 576 ரன்கள் சோ்த்த நிலையில் ‘டிக்ளோ்’ செய்தது. அகா சல்மான் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 132, முகமது ரிஸ்வான் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 50 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை தரப்பில் ஆசிதா ஃபொ்னாண்டோ 3, பிரபாத் ஜெயசூரியா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினா்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 410 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை, 67.4 ஓவா்களில் 188 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அதிகபட்சமாக ஏஞ்ஜெலோ மேத்யூஸ் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 63 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். கேப்டன் திமுத் கருணாரத்னே 41 ரன்கள் அடிக்க, இதர விக்கெட்டுகள் சொற்ப ரன்களில் சரிந்தன.

பாகிஸ்தான் பௌலா்களில் நோமன் அலி 7, நசீம் ஷா 3 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினா். 201 ரன்கள் அடித்த பாகிஸ்தானின் அப்துல்லா ஷஃபிக் ஆட்டநாயகன், 221 ரன்கள் அடித்து 3 விக்கெட்டுகள் சாய்த்த அகா சல்மான் தொடா்நாயகன் விருது பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com