வெள்ளிப் பதக்கம் வென்ற விஷால்
வெள்ளிப் பதக்கம் வென்ற விஷால்

சிறப்பு ஒலிம்பிக்: தமிழகத்தைச் சேர்ந்தவருக்கு வெள்ளிப் பதக்கம்!

சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டியில், ஆண்களுக்கான பளுத்தூக்குதல் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான விஷால் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 


சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டியில், ஆண்களுக்கான பளுத்தூக்குதல் பிரிவில், தமிழகத்தைச் சேர்ந்த 16 வயதான விஷால் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

சிறப்பு ஒலிம்பிக் உலக விளையாட்டு போட்டிகள் ஜூன் 17ஆம் தேதிமுதல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 198 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். 

இப்போட்டியில் ஒட்டுமொத்தமாக 190 நாடுகளைச் சேர்ந்த 7,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். 

மொத்தம் 26 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆண்களுக்கான பளுதூக்குதல் பிரிவில் புதுச்சேரியை சேர்ந்த 16 வயதான விஷால் என்பவர் (122.50 கிலோ) வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

இதற்கு முன்பு பெண்களுக்கான 800 மீட்டர் தடகளப் பிரிவில் இந்தியாவின் கீதாஞ்சலி தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு ஒலிம்பிக் என்பது அறிவுசார் குறைபாடுகள் உள்ளவர்களுக்கான உலகின் மிகப்பெரிய விளையாட்டு நிகழ்வாகும். சிறப்பு ஒலிம்பிக்கில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வெல்லும் இந்திய வீரர்களுக்கு முறையே ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை  ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com