மேற்கிந்தியத் தீவுகள் தொடர்: இந்திய அணியில் இளம் வீரர்கள் ருதுராஜ், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் தொடர்: இந்திய அணியில் இளம் வீரர்கள் ருதுராஜ், ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூலை 12 முதல் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்கிறது. இந்த நிலையில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு முதல் முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் அண்மையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தங்களின் சிறப்பான பங்களிப்பை அளித்தனர். அதேசமயம் மூத்த வீரர் புஜாராவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. 

டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எஸ்.பரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, ஷா்துல் தாக்குா், அக்ஷர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனத்கட், நவ்தீப் சைனி.

ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ருதுராஜ், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். ருதுராஜ் மற்றும் முகேஷ் குமார் ஆகியோருக்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு கிரிக்கெட் அணியிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்குர், ஜடேஜா, அக்ஷசர் படேல், சஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

அதேசமயம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 போட்டிக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com