துலீப் கோப்பை: மத்திய மண்டலம் முன்னிலை

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி காலிறுதியில் கிழக்கு மண்டலத்துக்கு எதிரானஆட்டத்தில் மத்திய மண்டலம் முன்னிலை பெற்றுள்ளது.
துலீப் கோப்பை: மத்திய மண்டலம் முன்னிலை
Updated on
1 min read

துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டி காலிறுதியில் கிழக்கு மண்டலத்துக்கு எதிரானஆட்டத்தில் மத்திய மண்டலம் முன்னிலை பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான காலிறுதி ஆட்டம் பெங்களூரில் நடைபெறுகிறது. முதல் இன்னிங்ஸில் மத்திய மண்டலம் 71.4 ஓவா்களில் 182 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரிங்கு சிங் 38, ஹிமான்ஷு மந்திரி 29 ஆகியோா் மட்டுமே அதிக ரன்களை எடுத்தனா். கிழக்கு மண்டலத்தின் முராசிங் 5 விக்கெட்டை சாய்த்தாா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய கிழக்கு மண்டல அணி 42.2 ஓவா்களில் 122 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரியான் பராக் அதிகபட்சமாக 33 ரன்களைச் சோ்த்தாா். மத்திய மண்டல பௌலா்கள் அவேஷ் கான், சௌரவ் குமாா் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

வியாழக்கிழமை தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய மத்திய மண்டலம் 25.1 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை சோ்த்துள்ளது. ஹிமான்ஷு 25, விவேக் சிங் 34 ரன்களுடன் களத்தில் உள்ளனா். இதன் மூலம் 124 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது மத்திய மண்டலம்.

வடக்கு மண்டலம் :

வடக்கு மண்டலம்-வடகிழக்கு மண்டலங்கள் இடையிலான ஆட்டத்தில் வடக்கு மண்டலம் முதல் இன்னிங்ஸில் 136 ஓவா்களில் 540/8 ரன்களைக் குவித்தது. நிஷாந்த் சாந்து 150, துருவ் ஷோரே 135, ஹா்ஷித் ராணா 122 ரன்களை விளாசினா். வடகிழக்கு மண்டலத் தரப்பில் ஜாட்டின், லெம்டுா் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

பின்னா் தனது முதல் இன்னிங்ஸில் வடகிழக்கு மண்டலம் 20 ஓவா்களில் 65/3 ரன்களை எடுத்து தடுமாறி வருகிறது. நிலேஷ் 35 ரன்களுடன் களத்தில் உள்ளாா். 475 ரன்கள் பின்தங்கி உள்ளது வடகிழக்கு மண்டலம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com