டபிள்யுபிஎல் முதல் ஆட்டம்: புதிய அறிவிப்பு

டபிள்யுபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டம் இரவு 7.30 மணிக்குப் பதிலாக இரவு 8 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலத்தில் மும்பை அணி
ஏலத்தில் மும்பை அணி

டபிள்யுபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டம் இரவு 7.30 மணிக்குப் பதிலாக இரவு 8 மணிக்குத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ சாா்பில் 5 மகளிா் அணிகள் பங்கேற்கும் டபிள்யுபிஎல் (உமன்ஸ் ப்ரீமியா் லீக்) டி20 லீக் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுவதால் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது டபிள்யுபிஎல். 

டபிள்யுபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யுபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் ஜெயண்ட்ஸ் (ஆமதாபாத்) அணியை அதானி நிறுவனம் ரூ. 1,289 கோடிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்தியாவின் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும் தில்லி கேபிடல்ஸ் அணியை ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும் உ.பி. வாரியஸ் (லக்னெள) அணியை கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் பெற்றுள்ளன. 

டபிள்யுபிஎல் 2023 போட்டியின் கேப்டன்கள் பட்டியல்

ஆர்சிபி - ஸ்மிருதி மந்தனா
உ.பி. வாரியர்ஸ் - அலிஸா ஹீலி
மும்பை இந்தியன்ஸ் - ஹர்மன்ப்ரீத் கெளர்
குஜராத் ஜெயண்ட்ஸ் - பெத் மூனி
தில்லி கேபிடல்ஸ் - மெக் லேனிங்

டபிள்யுபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன. மும்பையில் உள்ள டிஒய் படேல் விளையாட்டுத் திடலில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. இந்திய நேரம் இரவு 7.30 மணிக்கு முதல் ஆட்டம் தொடங்குவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது முதல் ஆட்டம் தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டாஸ் நிகழ்வு இரவு 7.30 மணிக்கும் முதல் ஆட்டம் இரவு 8 மணிக்கும் தொடங்கும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கீர்த்தி சனான், ஏபி தில்லான் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மாலை 6.25 மணி முதல் தொடக்க விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com