டபிள்யுபிஎல்: வர்ணனையாளர்கள் பட்டியலில் வெங்கடேஷ் பிரசாத், ஆகாஷ் சோப்ரா!

கே.எல். ராகுல் விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் வெங்கடேஷ் பிரசாத்தும் ஆகாஷ் சோப்ராவும் சமீபத்தில் மோதிக்கொண்டார்கள்.
டபிள்யுபிஎல்: வர்ணனையாளர்கள் பட்டியலில் வெங்கடேஷ் பிரசாத், ஆகாஷ் சோப்ரா!

பிசிசிஐ சாா்பில் 5 மகளிா் அணிகள் பங்கேற்கும் டபிள்யுபிஎல் (உமன்ஸ் ப்ரீமியா் லீக்) டி20 லீக் போட்டி மும்பையில் இன்று தொடங்குகிறது. உலகின் முன்னணி கிரிக்கெட் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுவதால் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது டபிள்யுபிஎல். 

டபிள்யுபிஎல் போட்டி மார்ச் 4 முதல் 26 வரை மும்பையில் உள்ள இரு மைதானங்களில் நடைபெறவுள்ளது. 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 5 அணிகளும் இதர 4 அணிகளுடன் தலா 2 ஆட்டங்களில் விளையாடும். டபிள்யுபிஎல் போட்டியின் விளம்பரதாரராக டாடா நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. டபிள்யுபிஎல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் குஜராத் - மும்பை அணிகள் மோதவுள்ளன. மும்பையில் உள்ள டிஒய் படேல் விளையாட்டுத் திடலில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. 

டபிள்யுபிஎல் போட்டிக்கான வர்ணனையாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. ஆங்கில வர்ணனையாளர்களின் பட்டியலில் கேட் கிராஸ், நதாலி, மெல் ஜோன்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். கன்னட மொழிக்கான பட்டியலில் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் ஹிந்தி மொழிக்கான பட்டியலில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் இடம்பெற்றுள்ளார்கள். டபிள்யுபிஎல் போட்டி, ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும் ஜியோ சினிமா ஓடிடியிலும் நேரலையாக ஒளிபரப்பாகவுள்ளது. 

கே.எல். ராகுல் விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் வெங்கடேஷ் பிரசாத்தும் ஆகாஷ் சோப்ராவும் சமீபத்தில் மோதிக்கொண்டார்கள். இதனால் இவ்விருவரும் டபிள்யுபிஎல் போட்டிக்கான வர்ணனையாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் இருவரும் வெவ்வேறு மொழிகளில் வர்ணனை அளிக்கவுள்ளதால் ஒன்றாக வர்ணனை வழங்குவது சாத்தியமில்லை என்று அறியப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com