
இன்ஸ்டகிராம் சமூகவலைத்தளத்தில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் பாண்டியாவை 25 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள்.
29 வயது பாண்டியா இந்திய அணிக்காக 2016 முதல் 11 டெஸ்டுகள், 71 ஒருநாள், 87 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இன்ஸ்டகிராம் தளத்தில் தொடர்ந்து பதிவுகள் எழுதி வருவதால் அவரைப் பலரும் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில் அவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 25 மில்லியனை எட்டியுள்ளது. இதற்கு நன்றி தெரிவித்துள்ளார் பாண்டியா. இந்த எண்ணிக்கையைத் தொட்ட இளம் கிரிக்கெட் வீரர் என்று அவர் பெயர் எடுத்துள்ளார்.
மேலும் இன்ஸ்டகிராம் தளத்தில் ஃபெடரர், நடால் போன்ற பிரபலங்களை விடவும் அதிகம் பேர் பாண்டியாவைப் பின்தொடர்கிறார்கள். ஃபெடரரை 11.3 மில்லியன் பேரும் நடாலை 17.9 மில்லியன் பேரும் இன்ஸ்டகிராமில் பின்தொடர்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.