கே.எல். ராகுல் கேப்டனாக இருப்பது அணியின் அதிர்ஷ்டம்: கம்பீர்

கேப்டனின் உடல்மொழியே நாம் எப்படி விளையாடுவோம் என்பதை முடிவு செய்யும்.
கே.எல். ராகுல் கேப்டனாக இருப்பது அணியின் அதிர்ஷ்டம்: கம்பீர்

ஐபிஇல் 2022 போட்டியில் புதிதாகக் களமிறங்கிய கே.எல். ராகுல் தலைமையிலான லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ், பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் நிகோலஸ் பூரனை ரூ. 16 கோடிக்குத் தேர்வு செய்தது. கே.எல். ராகுல், டி காக், நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஸ்டாய்னிஸ், கிருனாள் பாண்டியா, மார்க் வுட், பிஸ்னோய், அவேஷ் கான் போன்ற பிரபல வீரர்கள் லக்னெள அணியில் உள்ளார்கள். 

ஐபிஎல் 2023 போட்டிக்கான லக்னெள அணியின் புதிய சீருடை இன்று அறிமுகம் செய்துவைக்கப்பட்டுள்ளது. சீருடை அறிமுக நிகழ்ச்சியில் லக்னெள அணியின் ஆலோசகர் கெளதம் கம்பீர் கூறியதாவது: 

கேப்டனிடம் இருந்துதான் எல்லாமும் தொடங்குகிறது. அவர் தான் அணிக்காக அடையாளம். எந்த அணியும் கேப்டனுக்கான அணி தான். கேப்டனுக்கு ஆதரவாக இருப்பதற்காகவே அணியில் உள்ள மற்ற வீரர்கள் உள்ளார்கள். கேப்டனைப் போல அணியில் உள்ள வேறு யாரும் நெருக்கடியை உணர மாட்டார்கள். கேப்டனின் உடல்மொழியே நாம் எப்படி விளையாடுவோம் என்பதை முடிவு செய்யும். நிதானமான குணம் கொண்ட கே.எல். ராகுலை கேப்டனாக அடைந்ததில் நாங்கள் அதிர்ஷ்டம் செய்தவர்கள். என்னிடம் அவருடைய குணம் இல்லை. நான் தீவிரத்தன்மை கொண்டவன். அது எனக்கு உதவியது. லக்னெள போன்ற ஓர் அணிக்கு கே.எல். ராகுல் போன்ற ஒரு கேப்டனே தேவை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com