

இந்திய பேட்டர் ஷ்ரேயஸ் ஐயர், காயம் காரணமாக 4-வது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது டெஸ்ட், ஆமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று, இந்திய அணியின் இன்னிங்ஸின்போது ஷ்ரேயஸ் ஐயர் பேட்டிங் செய்ய வரவில்லை. 3-வது நாளன்று ஃபீல்டிங் செய்தபோது முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால் இந்நிலை ஏற்பட்டதாக பிசிசிஐ அறிவித்தது. தற்போது 5-வது நாளிலும் அவர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுகு வலி காரணமாக முதல் டெஸ்டிலும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷ்ரேயஸ் ஐயர் விளையாடவில்லை. தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷ்ரேயஸ் ஐயர் பங்கேற்க மாட்டார் எனத் தெரிகிறது. கேகேஆர் அணியின் கேப்டனாக உள்ள ஷ்ரேயஸ் ஐயர், ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டங்களிலும் விளையாடுவது சிரமம் என அறியப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.