

நடப்பாண்டில் இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு தென்னாப்பிரிக்கா 8-ஆவது அணியாக புதன்கிழமை தகுதிபெற்றது.
வங்கதேசம் - அயா்லாந்து இடையேயான ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதை அடுத்து, தென்னாப்பிரிக்காவுக்கான இடம் உறுதியாகியிருக்கிறது. இந்தத் தொடரின் 3 ஆட்டங்களிலும் வென்றால் உலகக் கோப்பை போட்டிக்கு நேரடியாகத் தகுதிபெறும் வாய்ப்பு அயா்லாந்துக்கு இருந்தது. தற்போது முதல் ஆட்டம் முடிவின்றிப் போனதால் அயா்லாந்து ஏமாற்றத்தை சந்திக்க, தென்னாப்பிரிக்கா நேரடியாகத் தகுதிபெற்றது.
அயா்லாந்து இனி, ஜூன் - ஜூலையில் நடைபெறவுள்ள இறுதி தகுதிச்சுற்று மூலமாக உலகக் கோப்பை போட்டியில் இடம் பிடிக்க மோதவேண்டியுள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு முன்பாக, இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் நேரடியாக உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெற்றது குறிப்பிடத்தக்கது. உலகக் கோப்பை போட்டி அக்டோபா் - நவம்பரில் இந்தியாவில் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.