
ஐபில் தொடரின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த இரு அணிகளுக்கும் இடையிலானப் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
இதனையடுத்து, கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய உள்ளது.
ராஜஸ்தான் அணியில் குல்தீப் யாதவுக்கு பதிலாக டிரெண்ட் போல்ட்டும் முருகன் அஸ்வினுக்குப் பதிலாக கே.எம்.ஆசிஃப்பும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.
இந்த சீசனில் இரு அணிகளுக்கும் 11 போட்டிகள் முடிவடைந்துள்ளன. இரு அணிகளும் 5 வெற்றிகளைப் பெற்றுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற இன்றையப் போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.