ஷுப்மன் கில்
ஷுப்மன் கில்

நீ பந்து போட்டால் சிக்ஸர் அடிப்பேன்: ஷுப்மன் கில் விட்ட சவால்!

ஹைதராபாத் அணியில் விளையாடிவரும் அபிஷேக் சர்மா பந்து வீசினால் சிக்ஸர் அடிப்பேன் என குஜராத் அணி வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 
Published on

ஹைதராபாத் அணியில் விளையாடிவரும் அபிஷேக் சர்மா பந்து வீசினால் சிக்ஸர் அடிப்பேன் என குஜராத் அணி வீரர் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார். 
 
குஜராத் டைட்டன்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று (மே 16) நடைபெற்றது.

இதில் குஜராத் அணியைச் சேர்ந்த சுப்மான் கில் சதமடித்ததால் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது. 

அவர் 58 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்சர் என 101 ரன்களை ஷுப்மன் குவித்தார். குறிப்பாக ஹைதராபாத் அணியின் அபிஷேக் சர்மா வீசிய 12வது ஓவரில் ஷுப்மன், சிக்ஸ், பவுண்டரிகளை விளாசினார். 

இந்நிலையில், தன்னுடைய ரன்கள் குவிப்பு குறித்து பேசிய அவர், ஹைதராபாத் அணிக்கு எதிரான என் முதல் ஐபிஎல் ஆட்டம் இருந்தது. அதே அணிக்கு எதிராக என் முதல் சதமும் அமைந்துள்ளது. முழுமையடைந்தது போல உணர்கிறேன். ஐபிஎல்லில் முதல் சதம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே சீசனில் எதிர்காலத்தில் இதுபோன்ற சதங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். 

ஆட்டத்தில் மிகவும் திருப்தியான விஷயம் என்றால் அது அபிஷேக் சர்மாவின் பந்துகளை விளாசியதுதான். நீ பந்து வீசினால் நான் சிக்ஸர் அடிப்பேன் என ஆட்டத்துக்கு முன்பு அவரிடம் கூறியிருந்தேன். அது நடந்தது எனக் குறிப்பிட்டார். 

அபிஷேக் சர்மாவும், ஷுப்மன் கில்லும் நீண்டகால நண்பர்கள். இருவரும் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவுக்காக விளையாடியவர்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com