கேப்டன்சியில் நான் யாரைப் போன்றும் செயல்பட விரும்பவில்லை: க்ருணால் பாண்டியா

நான் அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், ஒருபோதும் மற்றொரு கேப்டனைப் போல் செயல்பட வேண்டும் என நினைக்கவில்லை.
கேப்டன்சியில் நான் யாரைப் போன்றும் செயல்பட விரும்பவில்லை: க்ருணால் பாண்டியா

நான் அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், ஒருபோதும் மற்றொரு கேப்டனைப் போல் செயல்பட வேண்டும் என நினைக்கவில்லை என லக்னௌ அணியின் கேப்டன் க்ருணால் பாண்டியா தனது கேப்டன்சி குறித்து மனம் திறந்துள்ளார். 

லக்னௌ அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கே.எல்.ராகுல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து விலகிய பின்னர் அந்த அணியின் புதிய கேப்டனாக க்ருணால் பாண்டியா அணியை வழிநடத்தி வருகிறார். முதல் ஐந்து போட்டிகள் வரை மட்டுமே கே.எல்.ராகுல் லக்னௌ அணியினை வழிநடத்தினார்.

இது தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பில் க்ருணால் பாண்டியா பேசியதாவது: கே.எல்.ராகுல் அணியில் இல்லாதது எங்களுக்கு மிகப் பெரிய இழப்பு. அவர் அணியில் இல்லாதது எங்களுக்கு சோகத்தைத் தருகிறது. ஆனால், அவருடைய இடத்திலிருந்து அணியினை வழிநடத்தும் மிகப் பெரிய சவாலை கையிலெடுத்துள்ளேன். நான் அணியின் துணைக் கேப்டனாக இருந்தேன் என்பது எனக்குத் தெரியும். இப்போது அணியின் கேப்டனாக உள்ளேன். நான் எப்போதும் கிரிக்கெட்டினை எப்படி ஆட வேண்டும் என நினைக்கிறேனோ அதைப் போலவே ஆடுகிறேன். எனது கேப்டன் பொறுப்பு என்பதும் அதைப் போன்றதுதான். நான் யாரைப் போன்றும் அணியினை வழிநடத்த வேண்டும் என நினைக்கவில்லை. நான் அனைவரிடமிருந்தும் நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ள விரும்புகிறேன். அதேசமயம், நான் நானாக இருக்க விரும்புகிறேன்.

நான் கிரிக்கெட்டில் என்னுடைய கடின உழைப்பை கொடுத்து விளையாடுகிறேன். அதே கடின உழைப்பை எனது கேப்டன் பொறுப்புக்கும் கொடுப்பேன். நீங்கள் கேப்டனாக இருக்கும்போது உங்களது வேலை சிறிது எளிதாகும். ஏனென்றால், நீங்கள் கேப்டனாக அணியை வழிநடத்தும்போது ஆட்டத்தின் போக்கை கணித்து அணியின் வெற்றிக்கு எப்படி உங்களது பங்களிப்பை கொடுக்கலாம் என நினைப்பீர்கள். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் எம்.எஸ்.தோனி ஒரு மிகப் பெரிய கேப்டன். அவரிடமிருந்தும் நிறைய கற்றுக் கொள்கிறேன். நான் அனைவரிடமிருந்தும் நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், நான் நானாக இருந்து என்னுடைய திறமையை வெளிக்கொணர நினைக்கிறேன் என்றார்.

15 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள லக்னௌ அணி பிளே ஆஃப் வாய்ப்பினை பிரகாசப்படுத்த அந்த அணிக்கு அடுத்த போட்டியில்  வெற்றி என்பது அவசியம். லக்னௌ நாளை மறுநாள் (மே 20) கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com