பிளே ஆஃப்பில் லக்னெள: கொல்கத்தா போராடித் தோல்வி!

கொல்கத்தாவுக்கு எதிராக ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னௌ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
பிளே ஆஃப்பில் லக்னெள: கொல்கத்தா போராடித் தோல்வி!

கொல்கத்தாவுக்கு எதிராக ஆட்டத்தில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னௌ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் லக்னௌ மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, லக்னௌ முதலில் பேட் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லக்னெள அணி 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் பூரன் அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வைபவ் அரோரா, ஷர்துல் தாக்குர் மற்றும் சுனில் நரைன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்கள் நன்றாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட் விழுந்து தடுமாறியது. இறுதியில் வழக்கம் போல் ரிங்கு சிங் அதிரடி காட்ட லக்னெள பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளினார்.

19வது ஓவரில் 20 ரன்களை ரிங்கு விளாச கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றி பெற 23 ரன்கள் தேவைப்பட்டன. யாஷ் தாகூர் போட்ட முதல் 3 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டன. 4வது பந்து வைடாக போடப்பட்ட நிலையில், அதில் ஒரு ரன் எடுக்கப்பட்டன. ஆகையால் கடைசி 3 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டன.

அதில், 4-வது பந்து சிக்ஸர், 5-வது பவுண்டரி, கடைசி பந்து சிக்ஸராக அமைய ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் லக்னெள அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. குஜராத், சென்னை அணிகள் முறையே முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ள நிலையில், லக்னெள மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com