விராட் கோலி சாதனையை முறியடிப்பாரா ஷுப்மன் கில்?
ஐபிஎல் போட்டி 2008 முதல் வருடம் ஒருமுறை நடந்து வருகிறது. உலகிலேயே மிகவும் முக்கியமான தொடராகவும் முன்னேறி வருகிறது. இந்த ஐபிஎல் போட்டியில் ஒரே சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார். 2016இல் 16 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி 973 ரன்கள் எடுத்து அசத்தினார். இதில் 4 சதங்கள், 7 அரைசதங்கள் அடங்கும். சராசரி 81. ஸ்டிரைக் ரேட் 152 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார் குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த ஷுப்மன் கில். இதுவரை 851 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும்.
இதையும் படிக்க: இதை செய்திருந்தால் வென்றிருப்போம்: ரோஹித் பேட்டி
நாளை (மே.28) நடைபெறும் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணியுடன் குஜராத் அணி மோத உள்ளது. இந்தப் போட்டியில் ஷுப்மன் கில் 123 ரன்களை எடுத்தால் விராட் கோலியின் சாதனையை முறியடிக்கலாம். இந்த சாதனையை ஷுப்மன் கில் நிகழ்த்துவாரா என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.
ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியல்:
- விராட் கோலி (ஆர்சிபி- 2016) - 973
- ஜாஸ் பட்லர் (ராஜஸ்தான் ராயல்ஸ்-2022) - 863
- ஷுப்மன் கில் (குஜராத் டைட்டன்ஸ்-2023)- 851
- டேவிட் வார்னர் (ஹைதராபாத்- 2016) - 848
- கேன் வில்லியம்சன் (ஹைதராபாத்- 2018)- 735
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.