பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி ஏமாற்றமளிக்கிறது: கேன் வில்லியம்சன்

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி ஏமாற்றமளிக்கிறது: கேன் வில்லியம்சன்

பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பையில் பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறையில் பாகிஸ்தான் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் தனது அரையிறுதிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அதேவேளையில், நியூசிலாந்து அணியின் நேற்றையத் தோல்வி அந்த அணியை இலங்கைக்கு எதிரான அதன் கடைசி லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் தோல்வியடைந்தது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய போதிலும் போட்டியின் முடிவு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. நாங்கள் அடுத்த சவாலுக்கு தயாராக இருக்க வேண்டும். பாகிஸ்தானுக்கு எதிராக கிடைத்த நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் முன்னேறிச் செல்ல வேண்டும். நாங்கள் மற்ற அணிகளின் வெற்றி, தோல்விகளை  நம்பி இருக்கப் போவதில்லை. நாங்கள் எங்களது சிறப்பான ஆட்டத்தை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்த வேண்டும்  என்றார்.

நியூசிலாந்து தனது கடைசி லீக் ஆட்டத்தில் வருகிற நவம்பர் 9 ஆம் தேதி இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com