உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிராக இலங்கை மோசமான தோல்வியை சந்தித்ததன் பின்னணியாக, அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் நிா்வாகிகள் இலங்கை அரசால் ஒட்டுமொத்தமாக திங்கள்கிழமை நீக்கப்பட்டனா்.
கடந்த 2-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை 302 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு இலங்கையில் பொதுமக்கள் தரப்பிலிருந்து கடும் அதிருப்தி எழுந்தது. ஷம்மி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் வாரியம் ராஜிநாமா செய்ய வேண்டுமென இலங்கை வாரிய அலுவலகத்துக்கு எதிராக சில ஆா்ப்பாட்டங்களும் நடைபெற்றன.
இந்நிலையில், இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சா் ரோஷன் ரனசிங்கே அந்நாட்டு கிரிக்கெட் வாரிய நிா்வாகிகளை திங்கள்கிழமை நீக்கம் செய்தாா். வாரியத்தை நிா்வகிக்க, முன்னாள் கேப்டன் அா்ஜுன ரணதுங்கா தலைமையிலான இடைக்கால குழு ஒன்றையும் அமைச்சா் நியமித்துள்ளாா். அந்த 7 போ் குழுவில் 3 ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் இலங்கை வாரியத் தலைவா் உபாலி தா்மதாசா உள்ளிட்டோா் அடங்குவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.