ரச்சின் ரவீந்திராவுக்கு திருஷ்டி கழிக்கும் பாட்டி! விடியோ வைரல்!

இந்தியாவைச் சேர்ந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு அவரின் பாட்டி திருஷ்டி கழிக்கும் விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. 
ரச்சின் ரவீந்திராவுக்கு திருஷ்டி கழிக்கும் பாட்டி
ரச்சின் ரவீந்திராவுக்கு திருஷ்டி கழிக்கும் பாட்டி
Published on
Updated on
1 min read

இந்தியாவைச் சேர்ந்த நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திராவுக்கு அவரின் பாட்டி திருஷ்டி கழிக்கும் விடியோ பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

பெங்களூருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு ரச்சின் ரவீந்திரா சென்றபோது அவருக்கு நடத்தப்பட்ட சடங்குகள் குறித்த விடியோவை அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட ரச்சின் ரவீந்திரா நியூசிலாந்து அணிக்காக விளையாடி வருகிறார். 23 வயதான இவர், நடப்பு உலகக் கோப்பை தொடரில் நியூஸிலாந்து அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் பலரின் கவனத்தை தற்போது ஈர்த்துள்ளார். 

நடப்பு உலகக் கோப்பை போட்டியில், இதுவரை 9 போட்டிகளில் விளையாடி, 565 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் அதிக ரன்கள் குவித்த வீரர்களின் பட்டியலில் சச்சினை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார். 

50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் 25 வயதுக்கு முன்பு அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் 27 ஆண்டுகால சாதனையை ரச்சின் முறியடித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கை உடனான நேற்றைய ஆட்டத்துக்கு பிறகு பெங்களூருவில் உள்ள தனது தாத்தா - பாட்டி வீட்டுக்கு ரச்சின் சென்றுள்ளார். அங்கு அவரின் பாட்டி ரச்சினுக்கு திருஷ்டி கழிக்கிறார். இதனை விடியோ பதிவு செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் ரச்சின் பகிர்ந்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com