தொடக்க வீரராக ரோஹித் சர்மா சாதனை! 

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தொடக்க வீரராக புதிய சாதனையை படைத்துள்ளார். 
தொடக்க வீரராக ரோஹித் சர்மா சாதனை! 

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 260 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 10,000க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார். 

ஆரம்பத்தில் ரோஹித் சர்மா 6வது, 7வது வீரராகவே களமிறங்கி வந்தார். முன்னாள் இந்திய கேப்டன் தோனிதான் ரோஹித்தை 2013இல் இங்கிலாந்திற்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கினார். அதற்காக தோனி அப்போது மூத்த வீரர்களின் விமர்சனங்களை எதிர்கொண்டார். 

இந்நிலையில் தொடக்க வீரராக மட்டும் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 14,000 ரன்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார். மேலும் ஒரே ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் பட்டியலில் முதலிடத்திலும் இருக்கிறார். 

கேப்டனாக ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்தவர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்துள்ளார் ரோஹித் சர்மா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com