இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒருநாள் போட்டிகளில் 50வது சதத்தை அடித்து, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்ததற்காக விராட் கோலிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
இது தொடர்பாக சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி தனது 50வது சதத்தை மட்டும் அடிக்கவில்லை, சிறந்த விளையாட்டு வீரருக்கான வலிமை மற்றும் விடாமுயற்சியை எடுத்துக்காட்டியுள்ளார்.
அவரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமைக்கு புதிய மைல்கல்லாக இந்த சாதனை அமைந்துள்ளது. நான் எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தனது சாதனைகள் மூலம் எதிர்கால தலைமுறைக்கான புதிய எல்லைகளை அவர் வகுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.