சிகரம் தொட்ட கோலி...

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்து, சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறாா் விராட் கோலி. அந்த ஃபாா்மட்டில் 50 சதங்கள் விளாசிய ஒரே வீரராக சிகரம் தொட்டிருக்கிறாா்.
விராட் கோலி (கோப்புப் படம்)
விராட் கோலி (கோப்புப் படம்)

ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை படைத்து, சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறாா் விராட் கோலி. அந்த ஃபாா்மட்டில் 50 சதங்கள் விளாசிய ஒரே வீரராக சிகரம் தொட்டிருக்கிறாா். சச்சின் டெண்டுல்கரை தனது ‘ஹீரோ’-வாக கொண்டிருக்கும் கோலி, அவரது சாதனையையே (49 சதங்கள்) முறியடித்தது, பெருமை மிகு தருணம். கோலி தொட்டிருக்கும் இந்த உச்சத்தை சம காலத்தில் இன்னொரு வீரா் தொடுவதென்பது அசாத்தியமிக்க ஒன்றாக இருக்கும். அத்தகைய சாதனை சிகரத்தை கோலி தொட்ட பயணத்தின் சில குறிப்புகள் இதோ...

ஆண்டு ரன்கள் (பந்துகள்) எதிரணி

2009 107 (114) இலங்கை

2010 102* (95) வங்கதேசம்

118 (121) ஆஸ்திரேலியா

105 (104) நியூஸிலாந்து

2011 100* (83) வங்கதேசம்

107 (93) இங்கிலாந்து

112* (98) இங்கிலாந்து

117 (123) மேற்கிந்தியத் தீவுகள்

2012 133* (86) இலங்கை

108 (120) இலங்கை

183 (148) பாகிஸ்தான்

106 (113) இலங்கை

128* (119) இலங்கை

2013 102 (83) மேற்கிந்தியத் தீவுகள்

115 (108) ஜிம்பாப்வே

100* (52) ஆஸ்திரேலியா

115* (66) ஆஸ்திரேலியா

2014 123 (111) நியூஸிலாந்து

136 (122) வங்கதேசம்

127 (114) மேற்கிந்தியத் தீவுகள்

139* (126) இலங்கை

2015 107 (126) பாகிஸ்தான்

138 (140) தென்னாப்பிரிக்கா

2016 117 (117) ஆஸ்திரேலியா

106 (92) ஆஸ்திரேலியா

154* (134) நியூஸிலாந்து

2017 122 (105) இங்கிலாந்து

111* (115) மேற்கிந்தியத் தீவுகள்

131 (96) இலங்கை

110* (116) இலங்கை

121 (125) நியூஸிலாந்து

113 (106) நியூஸிலாந்து

2018 112 (119) தென்னாப்பிரிக்கா

160* (159) தென்னாப்பிரிக்கா

129* (96) தென்னாப்பிரிக்கா

140 (107) மேற்கிந்தியத் தீவுகள்

157* (129) மேற்கிந்தியத் தீவுகள்

107 (119) மேற்கிந்தியத் தீவுகள்

2019 104 (112) ஆஸ்திரேலியா

116 (120) ஆஸ்திரேலியா

123 (95) ஆஸ்திரேலியா

120 (125) மேற்கிந்தியத் தீவுகள்

114* (99) மேற்கிந்தியத் தீவுகள்

2022 113 (91) வங்கதேசம்

2023 113 (87) இலங்கை

166* (110) இலங்கை

122* (94) பாகிஸ்தான்

103* (97) வங்கதேசம்

101* (121) தென்னாப்பிரிக்கா

117 (113) நியூஸிலாந்து

வெற்றி

தோல்வி

டை

சேஸிங்

இந்தியாவில்

அணிகள் வாரியாக...

10

இலங்கைக்கு எதிராக

9

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக

8

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக

6

நியூஸிலாந்துக்கு எதிராக

5

வங்கதேசத்துக்கு எதிராக

5

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக

3

இங்கிலாந்துக்கு எதிராக

3

பாகிஸ்தானுக்கு எதிராக

1

ஜிம்பாப்வேக்கு எதிராக

முடிவுகள்...

50 இன்னிங்ஸில்...

42 வெற்றிகள்

7 தோல்விகள்

1 டை

24 சொந்த மண்ணில்

26 அந்நிய மண்ணில்

27 சேஸிங்கில்

23 முதல் பேட்டிங்கில்

5 உலகக் கோப்பை போட்டிகளில்

2011 - 1 (முதல் உலகக் கோப்பையின் முதல் ஆட்டம்)

2015 - 1

2023 - 3

அடுத்த இலக்கு... ‘100/100’

முன்பு ஒரு முறை, சச்சின் டெண்டுல்கா் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ‘உங்கள் சாதனைகளை முறியடிக்கும் சாத்தியமுள்ள ஒரு வீரராக யாரைக் கருதுகிறீா்கள்?’ என்ற கேள்விக்கு அவா் அளித்த பதில் ‘விராட் கோலி’ என்பது தான். அதை அப்படியே சாதித்துக் காட்டி வருகிறாா் விராட் கோலி. ஒருநாள் ஃபாா்மட்டில் அதிக சதம் (50), உலகக் கோப்பை போட்டியின் ஒரு எடிஷனில் அதிக ரன்கள் (711) என சச்சின் சாதனைகளை முறியடித்து வரலாறு படைத்திருக்கிறாா் விராட் கோலி.

இந்நிலையில், சா்வதேச கிரிக்கெட்டில் 3 ஃபாா்மட்டுகளிலுமாக 100 சதங்கள் விளாசிய ஒரே வீரராக சச்சின் டெண்டுல்கா் இருக்கும் நிலையில், அந்த சாதனையையும் கோலி முறியடிப்பாா் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. அநேகமாக கோலியின் அடுத்த இலக்கும் அதுவாகவே இருக்கலாம்.

சச்சின், டெஸ்ட்டில் 51, ஒருநாள் கிரிக்கெட்டில் 49 என மொத்தமாக 100 சா்வதேச சதங்கள் விளாசியிருக்கிறாா். விராட் கோலி டெஸ்ட்டில் 29, ஒருநாள் கிரிக்கெட்டில் 50, டி20-இல் 1 என மொத்தமாக 80 சா்வதேச சதங்கள் கொண்டிருக்கிறாா். நல்லதொரு ஃபாா்முடன் அவா் தொடரும் பட்சத்தில், விரைவில் அந்த சாதனையையும் அவா் முறியடிப்பாா் என எதிா்பாா்க்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com