சர்வதேச ஒருநாள், டி20 போட்டிகளில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தும் ஐசிசி!

சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
சர்வதேச ஒருநாள், டி20 போட்டிகளில் புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தும் ஐசிசி!

சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் புதிய விதியை ஐசிசி அறிமுகப்படுத்தியுள்ளது. 

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என ஐசிசி புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த முடிவு இன்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதியினை ஐசிசி சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. 

இது தொடர்பாக ஐசிசி தரப்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு இன்னிங்ஸில் பந்துவீச்சாளர் ஒருவர் ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே 60 விநாடிகளுக்கு மேலாக 3 முறை எடுத்துக்கொள்ளும் பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும் என்ற  புதிய விதிமுறையை ஐசிசி சோதனை முயற்சியில் அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய விதிமுறை டிசம்பர் 2023 முதல் ஏப்ரல் 2024 வரை முதல் கட்டமாக சோதனை முயற்சியில் கடைபிடிக்கப்படும். இரண்டு ஓவர்களுக்கு இடையே பந்துவீச்சாளர் எடுத்துக் கொள்ளும் நேரத்தினை கணக்கிட கடிகாரம் பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com