சர்வதேச டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் படைத்த புதிய சாதனைகள்!

சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் புதிதாக பல சாதனைகளைப் படைத்துள்ளார்.
சர்வதேச டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் படைத்த புதிய சாதனைகள்!

சர்வதேச டி20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் புதிதாக பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 போட்டி நேற்று முன் தினம் (நவம்பர் 28) குவாஹாட்டியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல்லின் அதிரடியான சதத்தினால் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. டி20 தொடரையும் இழக்காமல் தவிர்த்துள்ளது. அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 48 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். இந்தப் போட்டியில் அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது. 

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 போட்டிக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டிகளில் மேக்ஸ்வெல் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். 

அந்த சாதனைகள் பின்வருமாறு:

அதிக சதங்கள்

சர்வதேச டி20 போட்டிகளில் அதிக சதங்கள் அடித்துள்ள ரோஹித் சர்மாவின் சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார். 

ரோஹித் சர்மா - 4 சதங்கள்
கிளன் மேக்ஸ்வெல் - 4 சதங்கள்
பாபர் அசாம் - 3 சதங்கள் 
காலின் முன்ரோ - 3 சதங்கள் 
சூர்யகுமார் யாதவ் - 3 சதங்கள் 

சேஸிங்கில் அதிக சதங்கள் 

கிளன் மேக்ஸ்வெல் - 3 சதங்கள் 
பாபர் அசாம் - 2 சதங்கள்
முகமது வசீம் - 2 சதங்கள்

ஆஸ்திரேலியாவுக்காக அதிவேக சதம் 

ஆரோன் ஃபின்ச் - 47 பந்துகளில் - இங்கிலாந்துக்கு எதிராக, 2013
ஜோஷ் இங்லிஷ் - 47 பந்துகளில் - இந்தியாவுக்கு எதிராக, 2023
கிளன் மேக்ஸ்வெல் - 47 பந்துகளில் - இந்தியாவுக்கு எதிராக, 2023
கிளன் மேக்ஸ்வெல் - 49 பந்துகளில் - இலங்கைக்கு எதிராக, 2016
கிளன் மேக்ஸ்வெல் - 50 பந்துகளில் - இந்தியாவுக்கு எதிராக, 2019

டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக அதிக ரன்கள்

நிக்கோலஸ் பூரன் - 592 ரன்கள்
கிளன் மேக்ஸ்வெல் - 554 ரன்கள்
ஆரோன் ஃபின்ச் - 500 ரன்கள்
ஜோஸ் பட்லர் - 475 ரன்கள்
தாசுன் ஷானகா - 430 ரன்கள்
மேத்யூ வேட் - 429 ரன்கள்

ஒரு அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்

ரோஹித் சர்மா - 39 சிக்ஸர்கள் - மே.இ.தீவுகளுக்கு எதிராக 
கிளன் மேக்ஸ்வெல் - 37 சிக்ஸர்கள் - இந்தியாவுக்கு எதிராக
ஆரோன் ஃபின்ச் - 35 சிக்ஸர்கள் - இங்கிலாந்துக்கு எதிராக 
ஹஸ்ரதுல்லா சசாய் - 35 சிக்ஸர்கள் - ஆப்கானிஸ்தானுக்கு எதிராக
நிக்கோலஸ் பூரன் - 35 சிக்ஸர்கள் - இந்தியாவுக்கு எதிராக
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com