ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: ரவி பிஷ்னோய்

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை கடைசி இரண்டு டி20 போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமென இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்: ரவி பிஷ்னோய்

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை கடைசி இரண்டு டி20 போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமென இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 4-வது டி20 போட்டி நாளை (டிசம்பர் 1) ராய்பூரில் நடைபெறுகிறது. முதல் மூன்று போட்டிகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் அணியில் இணைந்துள்ளார். அவரது வருகை இந்திய அணிக்கு மேலும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.

இந்த நிலையில், ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை கடைசி இரண்டு டி20 போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமென இந்திய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை கடைசி 2 போட்டிகளில் பேட்டிங்கில் மிகப் பெரியத் தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். அணியில் உள்ள மூத்த வீரர்களில் ஒருவரான அவரின் வருகை எங்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும். சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்படுகிறார். வீரர்களை சுதந்திரமாக அவர்களது ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூறுகிறார் என்றார். 

இந்திய அணிக்காக இதுவரை 19 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ரவி பிஷ்னோய் 31 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com