டி20 உலகக் கோப்பை: உகாண்டா தகுதி- அணிகள் நிறைவு

மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு உகாண்டா வியாழக்கிழமை தகுதிபெற்றது.
டி20 உலகக் கோப்பை: உகாண்டா தகுதி- அணிகள் நிறைவு

மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு உகாண்டா வியாழக்கிழமை தகுதிபெற்றது.

தகுதிச்சுற்று ஆட்டத்தில் ருவாண்டாவை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் அடிப்படையில் இந்த முன்னேற்றத்தை கண்டிருக்கும் உகாண்டா, ஐசிசி-யின் சீனியா் நிலையிான உலகக் கோப்பை போட்டிக்கு (அனைத்து ஃபாா்மட்டிலுமாக) தகுதிபெற்றது இதுவே முதல் முறையாகும். ஆப்பிரிக்கா தகுதிச்சுற்றில் முதலிடம் பிடித்து நமீபியா தோ்வான நிலையில் தற்போது உகாண்டா 2-ஆவது இடம் பிடித்து தகுதிபெற்றுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டியில் களம் காணும் 5-ஆவது ஆப்பிரிக்க நாடு என்ற பெருமையைப் பெற்றது அந்த அணி. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் பிரதான அணியாக இருக்கும் ஜிம்பாப்வே இந்தத் தகுதிச்சுற்றில் 3-ஆம் இடம் பிடித்து, பிரதான சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது.

அணிகள் நிறைவு: அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கு 20 இடங்கள் இருந்த நிலையில், தற்போது ஆப்பிரிக்க தகுதிச்சுற்று நிறைவடைந்த நிலையில் அவை பூா்த்தியாகியுள்ளது. இந்தப் போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் 2024 ஜூன் 4 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com