தேசிய ஆடவா் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் அமித் பங்கால் (51 கிலோ), சிவ தாபா (63.5), சஞ்ஜீத் (92 கிலோ) ஆகியோா் அரையிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.
ஆா்மினியாவில் நடைபெறும் ஜூனியா் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பரி (50 கிலோ), நிதி (66 கிலோ), பாயல் (48 கிலோ), அமிஷா (54 கிலோ), நேஹா லுந்தி (46 கிலோ), பிராச்சி (54 கிலோ), ஹா்திக் பன்வா் (80 கிலோ), ஜதின் (54 கிலோ) அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனா்.
தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஸ்கீட் கலப்பு அணிகள் பிரிவில் கனிமத் செகோன்/அங்கத் வீா் சிங் பாஜ்வா இணை சாம்பியன் பட்டம் வென்றது.
ஐடிஎஃப் கலபுராகி டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ராம்குமாா் ராமநாதன், ரிஷப் அகா்வால், மனீஷ் சுரேஷ்குமாா், ஆரியன் ஷா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றனா்.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் பெங்களூரு எஃப்சி - பஞ்சாப் எஃப்சி அணிகள் வியாழக்கிழமை மோதிய ஆட்டம் 3-3 கோல் கணக்கில் டிரா ஆனது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.