
ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் உலகக் கோப்பையின் 13-வது எடிஷன் இன்றுமுதல் நவம்பர் 19-ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
அகமதாபாதில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது நியூசிலாந்து. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்த போட்டியில் காயம் காரணமாக இங்கிலாந்தின் பென் ஸ்டோகஸ், நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டிம் செளதி இடம்பெறவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.