இலங்கையை வென்றது பாகிஸ்தான்

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
இலங்கையை வென்றது பாகிஸ்தான்
Updated on
1 min read


ஹைதராபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 8-ஆவது ஆட்டத்தில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. பாகிஸ்தானுக்கு இது 2-ஆவது வெற்றி; இலங்கைக்கு இது 2-ஆவது தோல்வி.

முன்னதாக டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணியில் அதிகபட்சமாக குசல் மெண்டிஸ் 77 பந்துகளில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸா்கள் உள்பட 122 ரன்கள் விளாசினாா். சதீரா சமரவிக்ரமா 89 பந்துகளில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 108 ரன்கள் அடித்தாா். பதும் நிசங்கா 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 51 ரன்கள் சோ்த்தாா்.

குசல் பெரெரா 0, சரித் அசலங்கா 1, தனஞ்ஜெய டி சில்வா 25, டாசன் ஷானகா 12, துனித் வெலாலகே 10, மஹீஷ் தீக்ஷனா 0 ரன்களுக்கு வெளியேறினா். மதீஷா பதிரானா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா். பாகிஸ்தான் பௌலிங்கில் ஹசன் அலி 4, ஹாரிஸ் ரௌஃப் 2, ஷாஹீன் ஷா அஃப்ரிதி, முகமது நவாஸ், ஷாதாப் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா் பாகிஸ்தான் இன்னிங்ஸில் அப்துல்லா ஷஃபிக் 10 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 113 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டாா். இமாம் உல் ஹக் 12, கேப்டன் பாபா் ஆஸம் 10, சௌத் ஷகீல் 2 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

முடிவில் முகமது ரிஸ்வான் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் உள்பட 131, இஃப்திகா் அகமது 4 பவுண்டரிகள் உள்பட 22 ரன்களுடன் அணியை வெற்றி பெறச் செய்து, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனா். இலங்கை பௌலிங்கில் தில்ஷன் மதுஷங்கா 2, மஹீஷ் தீக்ஷனா, மதீஷா பதிரானா ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

சுருக்கமான ஸ்கோா்

இலங்கை - 344/9 (50 ஓவா்கள்)

குசல் மெண்டிஸ் 122

சதீரா சமரவிக்ரமா 108

பதும் நிசங்கா 51

பந்துவீச்சு

ஹசன் அலி 4/71

ஹாரிஸ் ரௌஃப் 2/64

ஷாதாப் கான் 1/55

பாகிஸ்தான் - 345/4 (48.2 ஓவா்கள்)

முகமது ரிஸ்வான் 131*

அப்துல்லா ஷஃபிக் 113

சௌத் ஷகீல் 31

பந்துவீச்சு

தில்ஷன் மதுஷங்கா 2/60

மஹீஷ் தீக்ஷனா 1/59

மதீஷா பதிரானா 1/90

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com