
உலகக் கோப்பை வரலாற்றில் இலங்கை அணிக்காக அதிவேக சதமடித்த வீரர் என்ற சாதனையை குசால் மெண்டிஸ் படைத்துள்ளார்.
உலகக் கோப்பைத் தொடரின் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி 200 ரன்களைக் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இப்போட்டியில் இலங்கை அணியின் குசால் மெண்டிஸ் இலங்கை அணிக்காக அதிவேகமாக சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். அவர் 65 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 77 பந்துகளில் 122 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் அடங்கும்.
முன்னதாக, இலங்கை அணியின் குமார் சங்ககாரா 70 பந்துகளில் சதம் விளாசியதே உலகக் கோப்பைப் போட்டிகளில் இலங்கை வீரர் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிவேக சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.