அதிக சிக்ஸர்கள் குறித்து கிறிஸ் கெயில் மகிழ்ச்சியடைவார்: ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரோஹித் சர்மா, அவரது இந்தப் பயணத்தில் கிறிஸ் கெயிலிடம் இருந்து ஊக்கம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.
அதிக சிக்ஸர்கள் குறித்து கிறிஸ் கெயில் மகிழ்ச்சியடைவார்: ரோஹித் சர்மா

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரோஹித் சர்மா, அவரது இந்தப் பயணத்தில் கிறிஸ் கெயிலிடம் இருந்து ஊக்கம் பெற்றதாக தெரிவித்துள்ளார்.

இந்தியா -ஆப்கானிஸ்தான் இடையிலான போட்டி நேற்று (அக்டோபர் 11) தில்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் சர்மா 81 பந்துகளில் 131 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் 5 சிக்ஸர்களை விளாசிய ரோஹித் சர்மா, சர்வதேசப் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் (556 சிக்ஸர்கள்) அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். முன்னதாக, மேற்கிந்தியத் தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் அந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். ரோஹித் சர்மா இந்த சாதனையை அவரது 453-வது சர்வதேசப் போட்டியில் சாத்தியமாக்கியுள்ளார். கிறில் கெயிலை ஒப்பிடுகையில் 30 ஆட்டங்களுக்கு முன்னதாகவே இந்த சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ள ரோஹித் சர்மா, அவரது இந்தப் பயணத்தில் கிறிஸ் கெயிலிடம் இருந்து ஊக்கம் பெற்றதாக தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கிறிஸ் கெயில் எப்போதும் யுனிவர்ஸல் பாஸ். நான் அவரது சாதனைப் புத்தகத்தில் இருந்து ஒரு சிறிய இலையை மட்டுமே எடுத்துள்ளேன். பல ஆண்டுகளாக கிறிஸ் கெயிலின் சிக்ஸர் அடிக்கும் திறனை நாம் பார்த்திருக்கிறோம். எங்கு விளையாடினாலும் சிக்ஸர் அடிக்கும் திறன்பெற்றவர் அவர். நாங்கள் இருவரும் ஒரே எண் (45) கொண்ட ஜெர்சியை அணிந்துள்ளோம். எனது இந்த சாதனை குறித்து கிறிஸ் கெயில் கண்டிப்பாக மகிழ்ச்சியாக இருப்பார். ஏனென்றால், இந்த சாதனையை படைத்திருப்பது 45-ஆம்  நம்பர் ஜெர்சியை அணிந்துள்ள வீரர். நான் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தபோது இதுபோன்று அதிக அளவிலான சிக்ஸர்கள் அடிப்பேன் என நினைத்ததுக் கூட கிடையாது. ஆனால், இதற்காக பல ஆண்டுகளாக உழைத்துள்ளேன். இந்த சாதனையைப் படைத்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com