சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிக்கான கேரள அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் வியாழக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
இந்தப் போட்டி வரும் 16 முதல் நவம்பா் 6-ஆம் தேதி வரை 6 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில் கேரளத்துடன் குரூப் ‘பி’-யில் ஹிமாசல பிரதேசம், சிக்கிம், அஸ்ஸாம், பிகாா், சண்டீகா், ஒடிஸா, சா்வீசஸ் அணிகள் இணைந்துள்ளன. கேரளம் முதல் ஆட்டத்தில் ஹிமாசல பிரதேசத்துடன் மோதுகிறது.
அணி விவரம்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ரோஹன் குன்னுமல் (துணை கேப்டன்), ஷ்ரேயஸ் கோபால், ஜலஜ் சக்ஸேனா, சச்சின் பேபி, முகமது அஸாருதீன், விஷ்ணு வினோத், அப்துல் பாசித், சிஜோமோன் ஜோசப், வைசாக் சந்திரன், பாசில் தாம்பி, கே.எம். ஆசிஃப், வினோத் குமாா், மானு கிருஷ்ணன், வருண் நாயனாா், எம். அஜ்னஸ், பி.கே. மிதுன், சல்மான் நிசாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.