ஒரு போட்டியால் கேப்டனாகவுமில்லை; கேப்டன்சியை இழக்கப் போவதுமில்லை: பாபர் அசாம்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவு தனது கேப்டன்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
ஒரு போட்டியால் கேப்டனாகவுமில்லை; கேப்டன்சியை இழக்கப் போவதுமில்லை: பாபர் அசாம்

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவு தனது கேப்டன்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை (அக்டோபர் 14) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு போட்டி தொடங்குவதற்கு முன்பே  ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. மிகப் பெரிய போட்டி என்பதால் இரு அணிகளுக்குமே அழுத்தம் அதிகமாக இருக்கும். இதுவரை 50  ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் 7 முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதுவரை மோதியுள்ள 7 போட்டிகளிலுமே இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது. தனது இந்த சாதனையைத் தக்கவைக்க இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதேபோல இந்தியாவிடம் அடையும் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பாகிஸ்தான் அணி விளையாட வேண்டிய இடத்தில் உள்ளது.

இந்த நிலையில்,  இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியின் முடிவு தனது கேப்டன்சியில் தாக்கத்தை ஏற்படுத்தாது என பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான போட்டியின் முடிவினால் எனது கேப்டன் பதவி பறிபோகும் என ஒருபோதும் நான் வருத்தமடைந்தது கிடையாது. கடவுள் எனக்கென்று என்ன எழுதியிருக்கிறாரோ அது எனக்கு கிடைக்கும். எனக்கு கிடைக்க வேண்டியது கண்டிப்பாக கிடைக்கும். ஒரு போட்டியால் எனக்கு கேப்டன் பதவி கிடைக்கவும் இல்லை, ஒரு போட்டியால் நான் எனது கேப்டன் பதவியை இழக்கப் போவதும் இல்லை. கடந்த காலங்களில் நாங்கள் எப்படி செயல்பட்டோம் என்பது தற்போது முக்கியமில்லை. நான் கடந்த காலத்தில் கவனம் செலுத்தப் போவதில்லை. எனது கவனம் எதிர்காலம் குறித்தே இருக்கும். சாதனைகள் என்பது முறியடிக்கப்படுவதற்காகவே உருவாக்கப்படுகிறது. நாங்கள் முதல் இரண்டு போட்டிகளில் எங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். நாளை நடைபெறும் ஆட்டத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com