உலகக் கோப்பையில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

உலகக் கோப்பைத் தொடரில் அண்மையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 345 ரன்கள் என்ற இலக்கை துரத்திப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. 
உலகக் கோப்பையில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள்!

உலகக் கோப்பைத் தொடரில் அண்மையில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் 345 ரன்கள் என்ற இலக்கை துரத்திப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. 

உலகக் கோப்பைத் தொடரின் 8-வது போட்டியில் பாகிஸ்தான் - இலங்கை அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் குவித்தது. இந்த இலக்கை பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் துரத்திப் பிடித்து வரலாற்று சாதனை படைத்தது. உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு அணியால் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையை பாகிஸ்தான் படைத்தது. இதற்கு முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணி துரத்திப் பிடித்த 328  ரன்களே அதிகபட்சமாக இருந்தது.

உலகக் கோப்பையில் துரத்திப் பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்குகள் விவரம்:

அணிதுரத்தி பிடித்த இலக்குஎதிரணிஆண்டு
பாகிஸ்தான்             345 ரன்கள் இலங்கை 2023
அயர்லாந்து             328  ரன்கள்  இங்கிலாந்து 2011
வங்கதேசம்             322 ரன்கள் மே.இ.தீவுகள் 2019
வங்கதேசம்             319 ரன்கள் ஸ்காட்லாந்து 2015
இலங்கை              313 ரன்கள் ஜிம்பாப்வே 1992

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com